koottalavillage
  Daily News
 
 

தினமலர் முதல் பக்கம் » ஆன்மிகம்

மேலும் உலகம் செய்திகள்:

  • நைஜீரியா தேவாலயத்தில் தாக்குதல்:3 பேர் பலி
  • இந்தியாவுக்கு இமாலய வெற்றி: ஹர்பஜன் "சுழலில்' இங்கிலாந்து காலி
  • "மாஜி' மிஸ் மலேசியாவை ஏலம் எடுத்தார் இந்திய வக்கீல்
  • இந்திய வீரர்களின் தியாக வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க இஸ்ரேல் திட்டம்
  • தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!
  • ஜேம்ஸ் பாண்ட்' பட பொன் விழா கொண்டாட்டம் ரசிகரை கிறங்கடித்த பின்னணி குரல் நாயகிக்கு தடை
  • 1,300 அடி உயர கட்டடத்தில் ஏறி பிரான்ஸ் "ஸ்பைடர் மேன்' சாதனை
  • விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாதஇந்தியர்கள் பலர் குவைத்தில் கைது
  • சென்னை: சமையல் எரிவாயு நிரப்புதல், லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 60 நாட்களாகியும் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உபயோகிப்பாளர்கள் 28 லட்சம் பேர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன. சமையல் எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பி, வினியோகஸ்தர் களிடம் இந்த நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. ஆனால், ஆயில் நிறுவனங்களில், சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் தற்காலிக பணியாளர்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்கள் நெருங்கும் சமயத்தில் வேலை நிறுத்தம் செய்வர். ஓட்டுனர் வேலை நிறுத்தம் லாரி வாடகையை உயர்த்த கோரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வர். இந்த நேரங்களில், எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பிய "லோடு' வினியோகஸ்தர்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படும். வினியோகத்தில் சிக்கல் துவங்கும். பொதுவாக, எரிவாயு சிலிண்டர்கள், பதிவு செய்த நாளில் இருந்து 21 நாளில் வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது பதிவு செய்து 41 நாட்களுக்கு பின்பே பல இடங்களில் வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் ஆயில் நிறுவனங்கள், வினியோகஸ்தர்களிடையே சுமுகமான உறவு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.ஆயில் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி, வினியோகஸ்தர்களுக்கு கொடுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும், அதை இயக்கும் ஓட்டுனர்களுக்கும் இடையே சம்பள பிரச்னை ஏற்பட்டது. சம்பளத்தை உயர்த்தி கேட்டு கடந்த 19, 20ம் தேதிகளில் ஓட்டுனர்கள் லாரியை இயக்க மறுத்து விட்டனர். அந்த நாட்களில் 86,000 சிலிண்டர்கள் தேக்கம் அடைந்தன. இது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.பொன்னேரி ஆர்.டி.ஓ., லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை சுமுகமாக தீர்த்தார். ஆயினும் எரிவாயு சிலிண்டர் சப்ளை, முழுவீச்சில் துவங்கவில்லை.லாரி உரிமையாளர் நிபந்தனை ஒரு "லோடு' என்பது 306 சமையல் எரிவாயு சிலிண்டர்கள். ஒரு "லோடு' எரிவாயு சிலிண்டர்களை லாரியில் ஏற்றி இறக்க, லாரி டிரைவருக்கு 620 ரூபாய், கிளீனருக்கு 310 ரூபாய் தருவதாக ஆர்.டி.ஓ., முன்னிலையில் லாரி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர். அதேநேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆயில் நிறுவனங்களில் இருந்து ஏற்றி, வினியோகஸ்தர்களின் கிடங்கில் இறக்க லோடுமேன்களுக்கு லாரி உரிமையாளர்கள் தரப்பில் 360 ரூபாய்; வினியோகஸ்தர் தரப்பில் 140 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.இது ஆயில் நிறுவனங்களின் ஒப்பந்தத்திற்கு புறம்பானது என்று வினியோகஸ்தர்கள் மறுத்து விட்டனர். இந்த பிரச்னையாலும் வினியோகத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர்களிடம் ஆயில் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கடந்த ஓராண்டாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி, தங்களது கிடங்குகளில் இறக்கும் பணியை, ஒரு பகுதியில் வினியோகஸ்தர்களே செய்து வந்தனர். இந்த பணியை செப்டம்பர் 15ம் தேதிக்குள் முறைப்படுத்த வேண்டும் என வினியோகஸ்தர்கள் கெடு விதித்திருந்தனர். கெடு முடிந்த நிøயிலும், பிரச்னைக்கு சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. இதனால், கடந்த 21ம் தேதி முதல், லாரிகளில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வருவதை ஒரு பிரிவு வினியோகஸ்தர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் நிலைமை சீரடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நிலைமை சீரடையுமா?எரிவாயு வினியோக மைய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""சில இடங்களில் 60 நாட்களாகியும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்துவிட்டாலும் சிலிண்டர்களை கொண்டு வருவது துவங்கவில்லை. தற்போதைய, நிலையில் நிலைமை சீரடைய பத்து நாட்களுக்கு மேலாகும்,'' என்றார்.எரிவாயு நுகர்வோர் வினியோகிப்பாளர் மற்றும் தொழிலாளர் நல மைய தலைவர் குருமூர்த்தி கூறுகையில், ""கடந்த ஓராண்டாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகஸ்தர்களே லாரிகளில் ஏற்றி, இறக்கி, வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தனர். இந்த பிரச்னையை தீர்க்க விடுத்திருந்த கெடு முடிந்து விட்டது. ஆயில் நிறுவனங்கள் இது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆயில் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைந்து, நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

 
  Today, there have been 14 visitors (16 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free